ஒருத்தீ
ஒருத் " தீ " ஆம் அவளும் அவளை அப்படித்தான் நினைத்திருந்தால்., எண்ணியதெல்லாம் எண்ணத்தில் மட்டுமே ஏக்கமாய் எரியும் வரை., பண்ணியதெல்லாம் பாவமோ எனும் பகற்க்கனவு சூழும் வரை., முன்னியதையும் பின்னியதையும் துறந்து நிகழில் நிலைக்கும் வரை., காலம் கடல் காற்று மலை அருவி பூமியென அனைத்தும் கடந்து சுத்த வெளியில் நிற்கும் வரை., அவ்வெளியில் இவ்வுயிரின் அடர் பிரகாச தரிசனத்தின் முன் அத் " தீ " நடுங்கி ஒடுங்கி பிரகாசம் இலக்கும் வரை., ஆம் அவள் " தீ " தான்... -பாலுமகேந்திரா-