சொல்லொன்றும் புதியதல்ல, சொல்பவனும் கவிஞனல்ல; சொல்ல வேண்டியவைகளெல்லாம் சொல்லியாயிற்று, சொற்ப்பதம் புதுப்பிக்க தேவை என்ன?; சொற்களால் கட்டப்பட்ட அழகிய கவி காவியமெல்லாம், சொக்கத்தங்கமாய் கண்னேதிரே மின்னுகயில்; சொல்லாமல் விட்ட சொல்லெதுவென்று தேடி, சொற்ப காலத்திற்குள் சொல்ல வேண்டியதைச் சொல்லாமற்ப் போவதென்பது; சொல்லி வளர்த்த மொழியை சொந்த அறிவினாலேயே; சொற்களை ஆயுதமாக்கி கொல்வதற்குச் சமம்; சொந்த வார்த்தைகளைன்று கூறும் சொல்லுரிமையை, சொல்லுலகம் யாருக்கும் முன்மொழியவில்லை; சொல்லமுதம் சுவைப்பதற்க்கேயன்றி அதனை தனதென்று, சொல்லும் சொல்லதிகாரம் தொல்காப்பியனுக்கும் இல்லை; சொல்லுலகின் தாயாகிய மொழிகள்தான் நம்முலகில், சென்றுவிட்ட காலத்தின் ஆதாரங்கள்; சொல்லனுபவத்தில் பயணித்தால் கம்பன் காலத்தையும், சொல்லிவிடும் காலக்கருவியாயிருக்கிறது மொழிகள்; சொல்லுலகின் விருட்சமாகிய மொழிகளியிலிருந்து வேர்விட்ட, சொற்கள்தான் நம் மானுட வாழ்வியலின் அர்த்தங்கள்; சொல்லினிது எனவே சொல்வனவைச் சொல்க, பொருள் அழகானால் அது கவிதை , பொருள் சுவைத்தால் அது இலக்கியம் , பொருள் புரிந்தால் அது கட்டுரை , பொருள் புதிரானால் அது கத...