பிரதிபலிப்பு

மொழியின் மீது நான் கொண்ட காதலால்,
பிறக்கும் சொற்கள், மொழியும் என்மீது காதல்
கொண்டதனால் கவிதையாகின்றது;
மொழியை காதலிக்க ஆயிரம் காரணம் எனக்குண்டு,
ஆனால் மொழி என்னைக் காதலிக்க ஒரே காரணம்தான்;
எவ்விதத்திலும் அதன் அழகை அர்த்தமற்றதாய் வர்ணித்துவிடக் கூடாது என்ற அச்சமே;
இல்லையெனில் கம்பனையும் நக்கீரனையும் காதலித்து கசிந்துருகிய மொழி,
இக்கலிகால மூடனையும் காதலிக்க அவசியம்
என்ன இருக்கிறது;
மொழியின் தொன்மையும் எனது புதுமையும்
கலப்பதால் பிறக்கும் சொற்கள் கவிதுவமாய் 
இருப்பதில் ஆச்சரியமில்லை,
ஏனெனில் அதன் "மூலவிதை" மொழி அது தற்போது
புதைந்திருக்கும் "மண்" நான்;
என்னுள் வளர்ந்தாலும் மரம் விதையை பிரதிபலிக்குமே அன்றி மண்ணையல்ல….

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

இருளொளி..

நாளைய உதயம்