சுயசோதனை..
ஜகத்தினை எதிர்க்க துணிந்த என் சத்தியம், அஞ்சுகிறது என் சுயத்தை வினவ;
மானுடம் செய்யக்கூடாதவை என்ற என் பட்டியல்,
உரைக்கிறது என் சுயத்தை ஊரறிய;
உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற என் பிரிவினை,
நகைக்கிறது என் சுயத்தை நாடறிய;
மாடியில் நின்று ஏழை பாவம் என்ற என் கருணை,
தோலுரிக்கிறது என் சுயத்தை உலகறிய;
ஆணுக்கு குறைந்தவளே பெண் என்ற என் கருத்து,
வெளிசமிடுகிறது என் சுயத்தை பெண்ணறிய;
ஒழுக்கம் கட்டுப்பாடு பிறர்க்கே என்ற என் சமரசம்;
மேய்கிறது என் சுயத்தை உடலறிய;
பசியும் பிணியும் எளியவர்க்கே என்ற என் சுயநலம்,
சுடுகிறது என் சுயத்தை உயிரறிய;
நீதியும் நேர்மையும் விற்பனைக்கே என்ற என் தாராளம்,
கொல்கிறது என் சுயத்தை கடவுளறிய...
Comments
Post a Comment