சொல்லதிகாரம்


சொல்லொன்றும் புதியதல்ல,
சொல்பவனும் கவிஞனல்ல;

சொல்ல வேண்டியவைகளெல்லாம் சொல்லியாயிற்று,
சொற்ப்பதம் புதுப்பிக்க தேவை என்ன?;

சொற்களால் கட்டப்பட்ட அழகிய கவி காவியமெல்லாம்,
சொக்கத்தங்கமாய் கண்னேதிரே மின்னுகயில்;

சொல்லாமல் விட்ட சொல்லெதுவென்று தேடி,
சொற்ப காலத்திற்குள் சொல்ல வேண்டியதைச் சொல்லாமற்ப் போவதென்பது;

சொல்லி வளர்த்த மொழியை சொந்த அறிவினாலேயே;
சொற்களை ஆயுதமாக்கி கொல்வதற்குச் சமம்;

சொந்த வார்த்தைகளைன்று கூறும் சொல்லுரிமையை,
சொல்லுலகம் யாருக்கும் முன்மொழியவில்லை;

சொல்லமுதம் சுவைப்பதற்க்கேயன்றி அதனை தனதென்று,
சொல்லும் சொல்லதிகாரம் தொல்காப்பியனுக்கும் இல்லை;

சொல்லுலகின் தாயாகிய மொழிகள்தான் நம்முலகில்,
சென்றுவிட்ட காலத்தின் ஆதாரங்கள்;

சொல்லனுபவத்தில் பயணித்தால் கம்பன் காலத்தையும்,
சொல்லிவிடும் காலக்கருவியாயிருக்கிறது மொழிகள்;

சொல்லுலகின் விருட்சமாகிய மொழிகளியிலிருந்து வேர்விட்ட,
சொற்கள்தான் நம் மானுட வாழ்வியலின் அர்த்தங்கள்;

சொல்லினிது எனவே சொல்வனவைச் சொல்க,
பொருள் அழகானால் அது கவிதை,
பொருள் சுவைத்தால் அது இலக்கியம்,
பொருள் புரிந்தால் அது கட்டுரை,
பொருள் புதிரானால் அது கதை,
பொருள் புதிதானால் அது புரட்சி,
சொற்கள் தான் நீ அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லும் சொத்து…..

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

இருளொளி..

நாளைய உதயம்