பேருண்மை...
இந்த இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் அனைத்தும் உணர்வு சார்ந்தே வாழ்கின்றன. இதில் மனிதன் என்னும் அற்(ப)புதமான படைப்பில் மட்டும் இன்பம் முன் ஓட துன்பம் பின் துரத்த இவ்விரு துருவங்களிடையே அன்பும்-கோபமும், காதலும்- காமமும், செல்வமும்-வருமையும்,நட்பும்-பகைமையிம், போட்டியும்-பொறாமையும், அறிவும்-அறியாமையும், தற்பெருமையிம்-வீழ்ச்சியிம்,ஆட்சியும்-அடிமையும், பேராசையும்-பேராதிக்கமும் ஒன்றன்பின் ஒன்றோடி பின் அவற்றிற்குள்ளேயே முட்டி மோதி அதை குணமென்றும் உணர்வென்றும் நம்பி இவ்விரு துருவத்தின் முழுமையையே உணராமல் குழப்பத்திலேயே உழன்று கிடைத்த காலத்தை இயற்கையிடம் திருப்பி ஒப்படைத்து விட்டு காலம் கடந்து விடுகின்றனர்.
ஒரு ஜனனமும் ஒரு மரணமும் ஆழ்ந்த வலி
வேதனைகளுக்கு பின்பே நிகழ்கிறது. இந்த சிறிய உண்மை அனைவரும் அறிந்ததே, ஆனால் விழிப்புணர்வில் மறந்து போன பேருண்மையும் இதுவே.ஒரு உயிரின் பிறப்பிற்காக தாய் ஏற்றுக் கொண்ட வலி வேதனையை, அந்த உயிர் தான் ஏற்றுக்கொள்ளும் பொழுது நிகழ்கிறது மரணம். இவ்விரு வலி வேதனைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் "முழுமையான கலப்படமற்ற இன்பமும்", "முழுமையான கலப்படமற்ற துன்பமும் " மட்டுமே. இதில் என்ன ஒரு அழகு என்றால் இவ்விரு நிலையின் முழுமையை அந்த உயிரால் உணர்ந்து அனுபவிக்க முடியாது. ஒரு பிறப்பால் ஏற்படும் "கலப்படமற்ற இன்பமும்" ஒரு இறப்பால் ஏற்படும் "கலப்படமற்ற துன்பமும்" , அந்த உயிரை சுற்றியுள்ள சமூகம் மட்டுமே அனுபவிக்கும்.
இந்த சிறிய உண்மை "பேருண்மை" ஆகி விட்டதால் தான் மனிதன் கண்டதையும் தேடி அலைந்து உண்மையை தரிசிக்காமலே தன் காலத்தை பயன்படுத்த முடியாதவனாய் இயற்கையிடம் திரும்பி ஒப்படைக்கிறான்(ள்).......
Comments
Post a Comment