கண்னேதிரே...

மாடியில் அமர்ந்திருக்கின்றேன்,

தொட்டியில் மலர வேண்டிய ரோஜா,
மொட்டுகளாய் காத்திருக்கின்றன;

தேன்ராட்டைப் போல திரண்டு நின்ற,
மேகங்கள் மழை பொழிய காத்திருக்கின்றன;

சுற்றி நின்ற மரங்களெல்லாம் அசையாமல்,
காற்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றன;

மிளிர்ந்து கொண்டிருக்கும் நிலவும் நட்சத்திரங்களும்,
மேகங்களின் விலகுதலுக்கு காத்திருக்கின்றன;

நடை பழகும் சிறு குழந்தை ஒன்று விழுந்து,
எழுத்து நடக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது;

எதிர்வீட்டு மாடியில் தாத்தா ஒருவர் தொடர்ந்து வரும்,
இருமலைத் தடுக்க முயன்று கொண்டிருக்கிறார்;

பக்கத்து வீட்டு புது மணப்பெண் கணவனின்,
அழைப்பிற்கு ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறாள்;

பறந்து திரிய வேண்டிய காக்கைகளெல்லாம்,
பறக்காமல் மாடியில் கரைத்துக் காத்திருக்கின்றன;

தாய்க்கு உணவளிக்காத ஒருவன் மிஞ்சிய உணவை,
காக்கைக்கு வைத்து பெருமிதத்துடன் அவை உண்பதைக் காண காத்திருக்கிறான்;

எழுதும் ஆவலில் அமர்ந்த நான் எங்கிருந்து,
ஆரம்பிக்கலாம் என்று காத்திருக்கிறேன்;

வெவ்வேறு நிகழ்வுகள் தான் என்றாலும் இவையனைத்தும் தன் அடுத்த நிகழ்வுகளுக்காக 
காத்திருக்கின்றன,

உலகம் இத்துடன் நின்றுவிடாது என்ற நம்பிக்கையில்……

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

இருளொளி..

நாளைய உதயம்