மனச்சான்று...
கருப்பு நிறத்தவள் என்,
கருவிழியிலிருந்து அகலாதவள்;
ஐயமில்லாமல் கூறுவேன் அவள்,
ஐந்தடி ஆறு அங்குலம் இருப்பாள்;
சுருள் சுருளாய் நீண்டிருக்கும் அவள்,
கூந்தல் கூத்தாடும் காற்றின் ராகத்தில்;
நேர்த்தியான ஓவியம் போன்ற முகமும்,
பூர்த்தியான சிற்பம் போன்ற உடலும் பெற்றவள்;
குறுகுறு பார்வையிலும் துறுதுறு பேச்சிலும்,
குழந்தைக்கு ஒருபடி மேலானவள் அவ்வளவே;
என் உலகிற்குள் வருவதற்கு அவள்,
என் அனுமதி கோரியதாக நினைவில்லை;
காதலால் கசிந்துருகியதையும் கண்டேன் அவள்,
கண்களால் என்னை கட்டிப்போட்டதையும் கண்டேன்;
நானனைத்தும் உனக்கென்றால் அவள்,
நானில்லாமைக் கடினமென்றால் குழம்பினேன்;
ஓரிரவு வருகை தந்தால் என்னறைக்கு அவள்;
ஓராயிரம் இரவு ஏக்கத்தை உடைத்தால் நிர்வாணமாய்;
அன்றிரவு முதல் பைத்தியத்தைப் போல அவள்,
அன்பிற்கும் அருகாமைக்கும் மட்டுமே ஏங்கினேன்;
காலத்தின் கோர விளையாட்டு என்,
காதல் மைதானத்தை சீர் கெடுத்தது வருந்தினேன்;
காதலியின் பிரிவை விட காலத்தால் அவள், காணமற்ப்போனது என்னை உயிருடன் கொன்றது;
என்னனுமதியின்றி உள்நுழைந்த அவள்,
எண்ணங்களை மட்டும் என்னுள் விட்டுத்தொலைந்தால்;
மூவாயிரம் இரவுகள் கடந்தாயிற்று அவள்,
மூச்சிற்க்காற்று முனங்கிக் கொண்டேயிருக்கிறது
என் காதுகளில்;
இரு உயிரின் இரகசிய வாழ்வியலில் நிகழ்ந்த,
இத்தனை அற்புதத்திற்கும் அழிவிற்கும் வேறேதும்
சான்றில்லை இவ்வரிகளைத் தவிர!!!......
Comments
Post a Comment